இந்தியா

முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி

முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி

webteam

எதிரி நாட்டு பீரங்கியை தாக்கி அழிக்கும் திறன் படைத்த ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்துள்ளது.

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தயாரித்திருக்கும் இந்த ஏவுகணை ஆந்திர மாநிலம் கர்னூலில் வைத்து நேற்று ஏவி பரிசோதிக்கப்பட்டது. சோதனைக்கென நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை அந்த ஏவுகணை வெற்றிகரமாகத் தாக்கி அழித்தது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குறைந்த எடை கொண்ட இந்த இலகுரக ஏவுகணையை இந்தியா மூன்றாவது முறையாக வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்திருக்கிறது. 

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தயாரித்துள்ள மூன்றாவது தலைமுறை ஏவுகணை இதுவாகும். இந்த ஏவுகணை விரைவில் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதன் சுமந்துசெல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக அமைந்ததற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.