இந்தியா

தேநீரில் சர்க்கரை குறைவு: மனைவியை கொலை செய்த கணவன்

தேநீரில் சர்க்கரை குறைவு: மனைவியை கொலை செய்த கணவன்

webteam

தேநீரில் சர்க்கரை குறைவாக இருந்ததால் மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டம் பார்பர் பகுதியை சேர்ந்தவர் பப்லு குமார் (40). இவரது மனைவி ரேனு(35). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் வழக்கம்போல் ரேனு, பப்லு குமாருக்கு காலையில் தேநீர் போட்டுக் கொடுத்துள்ளார். அதில் சர்க்கரை குறைவாக இருந்ததாக தெரிகிறது. இதனால் பப்லு குமார், ரேனுவிடம் சண்டையிட்டு உள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பப்லு குமார் கிச்சனில் இருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு எழுந்த மூன்று பிள்ளைகளும் கிச்சனில் சென்று பார்த்தபோது தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்த பப்லு குமாரை தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் "தேநீரில் சர்க்கரை இல்லாததால் கணவர், மனைவியை கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்துள்ளோம். அவர்களின் மூன்று பிள்ளைகள் இது குறித்து சாட்சி கூறியுள்ளனர். விரைவில் பப்லு குமார் கைது செய்யப்படுவார்" எனத் தெரிவித்தனர்.