இந்தியா

டீச்சரின் துண்டிக்கப்பட்ட தலையோடு ஓடிய இளைஞர்..! விரட்டிப்பிடித்த போலீஸ்

டீச்சரின் துண்டிக்கப்பட்ட தலையோடு ஓடிய இளைஞர்..! விரட்டிப்பிடித்த போலீஸ்

webteam

ஆசிரியை ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலையோடு 2 கி.மீ தூரம் ஓடி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த இளைஞர் பலகட்ட முயற்சிக்கு பின் கைது செய்யப்பட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலம் சேரைகேலா மாவட்டத்தில் உள்ளது ஹப்ரசாய் ஆரம்பப் பள்ளி. இப்பள்ளியின் வெளியிலேயே ஏகாம்பரம் என்ற 26 வயது இளைஞர் வாழ்ந்து வந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட அவருக்கு குடும்பம் என்று யாரும் இல்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் மதிய உணவு நேரத்தில் பள்ளியின் அருகில் நின்று கொண்டிருந்த ஆசிரியை ஒருவரை தரதரவென்று இழுத்த ஏகாம்பரம் தன் கையில் வைத்திருந்த மிகப்பெரிய வாளை வைத்து ஆசிரியையின் கழுத்தை துண்டாக வெட்டினார். இதில் ஆசிரியையின் தலை ஒருபக்கம், உடம்பு ஒரு பக்கம் என இரண்டு துண்டாக ஆனது. இதனை நேரில் பார்த்த மக்கள் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்த பார்த்தபோதும் கூட ஏகாம்பரம் அந்த இடத்தை விட்டு விலகிச் செல்லவில்லை. ஒரு கையில் ஆசிரியையின் தலையை வைத்திருந்தார். மற்றொரு கையில் இரண்டு பெரிய வாளை வைத்திருந்தார். இதனால் பொதுமக்கள் மற்றும் போலீசார் ஏகாம்பரம் அருகில் செல்ல பயப்பட்டனர்.

அந்த நேரத்தில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த ஏகாம்பரம் ஆசிரியையின் தலையோடு அந்த இடத்தில் இருந்து ஓட ஆரம்பித்தார். பின்னர் அங்கிருந்த காட்டுக்குள் ஓடி மறைந்தார். போலீசாரும், பொதுமக்களும் ஏகாம்பரத்தை தேடிச் சென்றனர். சுமார் 2 மணி நேரம் அவன் காட்டுக்குள் ஆசிரியையின் தலையோடி ஓடியிருக்கிறார். பின்னர் அங்கிருந்த முட்புதர் ஒன்றிற்குள் ஏகாம்பரம் மறைந்திருந்த நிலையில் போலீசார் அவரை பிடித்தனர். இதனிடையே போலீசார் கைது செய்யபோது சுற்றியிருந்த உள்ளூர் கும்பல் ஏகாம்பரத்தை தாக்க ஆரம்பித்தது. பின்னர் அந்த கும்பலிடம் இருந்து ஏகாம்பரத்தை காப்பாற்றிய போலீசார், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனிடையே ஆசிரியை கொன்ற அந்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.