இந்தியா

ரயில்வே ஸ்டேஷனில் பெண்ணுக்கு முத்தம்: சிசிடிவி உதவியால் இளைஞர் கைது!

ரயில்வே ஸ்டேஷனில் பெண்ணுக்கு முத்தம்: சிசிடிவி உதவியால் இளைஞர் கைது!

webteam

ரயில்வே ஸ்டேஷனில் தனியாக இருந்த இளம்பெண்ணை இழுத்து முத்தம் கொடுத்த இளைஞரை சிசிடிவி உதவியால் போலீசார் கைது செய்தனர்.

மும்பை துர்பே ரயில்வே ஸ்டேஷனில் நேற்று காலை 11.45 மணிக்கு 20 வயது இளம் பெண் ஒருவர் கன்சோலி செல்வதற்காக காத்திருந்தார். ஸ்டேஷனில் அதிகக் கூட்டமில்லை. அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர், அந்தப் பெண்ணின் அருகில் சென்று திடீரென்று அவரை இழுத்து அணைத்தான். பின்னர் முத்தம் கொடுத்தான். அந்தப் பெண் அவரைத் தள்ளிவிட்டுவிட்டு தவித்துக்கொண்டிருந்தார். அதற்குள் அந்த இளைஞன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

இதை சிசிடிவி-யில் பார்த்துக்கொண்டிருந்த ரயில்வே போலீசார் உடனடியாக உஷாராகி அவனை வளைத்துப் பிடித்தனர். அந்தப் பெண் கொடுத்த புகாரை அடுத்து அவன் கைது செய்யப்பட்டான். அவன் நரேஷ் ஜோஷி என்பது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.