இந்தியா

அதிகரிக்கும் இளவயது மரணங்கள் - நடனமாடிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் மரணம்

Abinaya

நடனமாடிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்து மரணத்தைத் தழுவும் சம்பவங்கள் சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது.

தற்போது மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் நகரில் கர்பா நிகழ்ச்சியில் நடனமாடிய 35 வயது நபர் நடமாடிக்கொண்டு இருக்கும்போது மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மயங்கி கீழே விழுந்த அந்த நபரை அவரது தந்தை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால் மாரடைப்பு ஏற்பட்டு தான் மயங்கி விழுந்தது உள்ளதாகவும், இதனால் இதயம் செயலிழந்து அவர் உயிரழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இச்செய்தியைக் கேட்ட அவரது தந்தைக்கும் அதிர்ச்சியில் அப்போதே மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையிலேயே சரிந்து விழுந்து, உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், மீண்டும் இதேபோன்ற ஒரு சம்பவம், குஜராத்தில் நிகழ்ந்துள்ளது.

குரஜாத்தில் ஆனந்த் மாவட்டத்தில் கர்பாவில் நடனமாடும் போது 21 வயது இளைஞர் கீழே விழுந்துள்ளார். உடனே அவர் விரைவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே உயிரிழந்தார். அவர் நடனமாடும்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.