செல்போனை சார்ஜரில் போட்டபடியே பேசிக்கொண்டிருந்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த தப்பான் கோஸ்வாமி (28) என்ற வாலிபர், மும்பை, மேற்கு பாந்த்ரா பகுதியில் நண்பர்களுடன் வசித்து வந்தார். பூக்கடை நடத்திய இவர், நேற்று காலை கடையில் செல்போனை சார்ஜரில் போட்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. சார்ஜரில் இருந்து போனை எடுக்காமல், அப்படியே பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்த டாக்டர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து பாந்த்ரா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.