இந்தியா

ஃப்ளைட்டில் ஃபைட்.. தெருச் சண்டையை நடுவான் வரை கொண்டுச்சென்ற பயணி.. வைரல் வீடியோ பின்னணி!

JananiGovindhan

பேருந்துகள், ரயில்கள் போன்ற பொது போக்குவரத்துகளில் அவ்வப்போது பொது மக்கள் சண்டையிடுவது, தகராறு செய்வதை அறிந்திருப்போம். ஆனால் நடு வானில் பறந்துக் கொண்டிருக்கும் விமானத்தில் சண்டையிட்டு சலசலப்பை ஏற்படுத்துவதெல்லாம் அரிதான நிகழ்வாகவே இருக்கும்.

அப்படியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில், இளைஞர் ஒருவர் சக பயணியிடம் சண்டையிட்டிருக்கிறார். அவரது சச்சரவை கண்ட மற்ற பயணிகள் அவரை சமாதானம் செய்திருக்கிறார்கள். இருப்பினும் தொடர்ந்து கத்தியிருக்கிறார்.

வெறும் 12 விநாடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவில், “நான் பேசும் போது யாரும் பேசுறது இல்லை. நான் சொல்றேன் இது மாதிரிலாம் என்கிட்ட பேசாதீங்க. உங்களுக்குளாம் நான் யாருனு தெரியாது” என ஆவேசமாக பேசி தகராறு செய்திருக்கிறார்.

அந்த இளைஞரின் ஆவேச பேச்சை அடுத்து பலரும் வலுகட்டாயமாக அமரச் சொல்கிறார்கள். மேலும் இப்படியெல்லாம் விமானத்தில் பறக்கும் போது தொண்டையை கிழித்துக் கொண்டு கத்த வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

இந்த வீடியோ முதலில் Being Aviator என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே முதலில் பகிரப்பட்டிருக்கிறது. பழைய வீடியோவாக இருந்தாலும் அண்மையில் McAdams என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து நெட்டிசன்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. அந்த வீடியோவிலேயே “தெருச் சண்டைகள் ஆகாயம் வரை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு மேல் பார்த்திருக்கும் இந்த வீடியோவில், “இதனை சாலையில் நடக்கும் சண்டை என சொல்ல முடியாது. இது ஏர் ரேஜ் என்று சொல்லலாம்.” என்றெல்லாம் நெட்டிசன்கள் பொறுமித் தள்ளியிருக்கிறார்கள்.