இந்தியா

தானே : 400 ரூபாய் கடன் தொகையை செலுத்த தவறியதற்காக நண்பனையே கொலை செய்தவர் கைது

தானே : 400 ரூபாய் கடன் தொகையை செலுத்த தவறியதற்காக நண்பனையே கொலை செய்தவர் கைது

EllusamyKarthik

400 ரூபாய் கடனை பெற்றுக்கொண்டு அதனை செலுத்த தவறியதற்காக நண்பனை கொலை செய்த நபரை தானே போலீசார் கைது செய்துள்ளனர்.

தானே மாவட்டத்தின் உல்ஹஸ்நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொலை செய்யப்பட்டவரிடம் கொடுத்த கடனை கொடுத்து விடுமாறு கொலையாளி பலமுறை கேட்டு வந்துள்ளார். இருப்பினும் கடன் தொகை வந்து சேராததால் இந்த விவகாரம் கொலையில் வந்து முடிந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

“கொலையானவரின் பெயர் பாஹிம். அவருடன் தான் கொலையாளி சோனு பணி செய்து வந்துள்ளார். இருவரும் நண்பர்கள். வழக்கம் போல கடனை கொடுக்குமாறு செவ்வாய் அன்றும் சோனு கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் சோனு, பாஹிமை பலமாக போஸ்டகம்பத்தில் தள்ளியுள்ளார்.

அதையடுத்து சம்பவ இடத்திலேயே பாஹிம் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து சோனுவை நாங்கள் கைது செய்துள்ளோம்” என ஹில் லைன் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.