ஹரியானா மாநிலத்தில் இரண்டு கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்திற்காக உயிரோடு இருந்த நபரை இறந்ததாகக்கூறி போலி இறப்புச் சான்றிதழ் கொடுத்த குடும்பத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர்
இரண்டு கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்திற்காக ஹரியானாவைச் சேர்ந்த நபர் கொள்ளைக்காக கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாகச் சொல்லி, அவரது குடும்பமே போலி இறப்புச் சான்றிதழ் வழங்கி இன்சூரன்ஸ் பணத்தை கைப்பற்ற முயன்றுள்ளது.
ஆனால், சந்தேகம் அடைந்த காவல்துறையினர் இறந்ததாக சொன்ன நபரைக் சட்டீஸ்கரில் கண்டுபிடித்து கைது செய்துள்ளது. இன்சூரன்ஸ் பணத்திற்காக குடும்பமே நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது