கேரளா உள்ளாட்சி தேர்தலில் மம்முட்டி வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளத்தின் பொன்னுருன்னி பகுதியில் அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாததால், அவர் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியவில்லை.
கேரளா மாநிலத்தில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்று வருகிறது. முதற்கட்டமாக திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் நேற்று உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றது.
கேரள திரைத்துறையில் கொடிக்கட்டி பரந்துக்கொண்டிருக்கும் மமுக்கா எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். மம்முட்டி திரைப்பட பணிகளில் பிஸியான இருக்கும் நேரங்களிலும் கூட ஒவ்வொரு முறையும் தனது ஐனநாயக கடமையை(வாக்களிப்பது) தவறாமல் செய்துவிடுவார். ஆனால் இம்முறை அவர் வாக்களிக்கவில்லை.
நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் மம்முட்டி வசிக்கும் எர்ணாகுளத்தின், பொன்னுருன்னி வார்டு வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறததால் அவரால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதேப்போன்று 2020ஆம் ஆண்டு நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் மம்முட்டியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாததால் அவர் வாக்களிக்கவில்லை.
முன்னதாக எர்ணாகுளம் மாவட்டத்தின் பனம்பிள்ளி பகுதியில் வசித்து வந்த மம்முட்டி, 2020ஆம் ஆண்டிற்கு முன் எர்ணாகுளத்தின் பொன்னுருன்னி பகுதிக்கு குடிப்பெயர்ந்திருக்கிறார். அப்போது பனம்பிள்ளி வார்டில் இருந்து பெயரை நீக்கி பொன்னுருன்னி வார்டில் இணைத்திருக்கிறார். இருப்பினும் உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் 2021இல் நடைப்பெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலிலும், 202 ஆம் ஆண்டு நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் பொன்னுருன்னி பகுதியில் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகரின் பெயரே வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதது மாநில தேர்தல் ஆணையத்தின் மெத்தனப்போக்கையும் நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராஜ்குமார் .ர