இந்தியா

மம்தா தனது மருமகனுக்காகவே அரசியலில் இருக்கிறார்: அமித் ஷா தாக்கு

மம்தா தனது மருமகனுக்காகவே அரசியலில் இருக்கிறார்: அமித் ஷா தாக்கு

JustinDurai

மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, எம்.பி.யாக உள்ளார். மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் அபிஷேக்கை குறிவைத்துதான் தேர்தல் களத்தில் நிற்கிறது பாஜக.

மேற்குவங்கம் மாநிலம் ஹவுராவில் இன்று பாஜக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மேடையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த 4 முன்னாள் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் அமித்ஷா உரையாற்றினார்.

அப்போது அமித்ஷா பேசுகையில், ''ஒவ்வொரு துறையிலும் மம்தா பானர்ஜி மேற்கு வங்காள மாநிலத்தை பின்னுக்கு கொண்டு சென்று விட்டார். அவரை மேற்கு வங்காள மாநில மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். மம்தா பானர்ஜி தனது மருமகனுக்காகத்தான் (அபிஷேக் பானர்ஜி) கட்சி நடத்தி வருகிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்து வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என மம்தா சிந்திக்க வேண்டும். 

தேர்தல் நடைபெறும்போது மம்தா பானர்ஜி மட்டும் தனியாக நிற்பார். ஜெய் ஸ்ரீ ராம் அவமதிப்பை மம்தாவின் கட்சி தொண்டர்கள் எதிர்க்கிறார்கள். இதனை பொறுத்துக் கொண்டு எவரும் அந்த கட்சியில் இருக்க மாட்டார்கள். வங்காளத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்’’ என்றார்.