இந்தியா

"பாஜகவை வீழ்த்த மேற்கு வங்கத்தில் முடியுமென்றால் உ.பி.யிலும் முடியும்" - மம்தா நம்பிக்கை

கலிலுல்லா

மேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்துவது சாத்தியமான நிலையில் உத்தரப்பிரதேசத்திலும் அது சாத்தியம்தான் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியை ஆதரித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பரப்புரை மேற்கொண்டார். லக்னோவில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, பாரதிய ஜனதா கட்சி இந்தியாவிற்கு அபாய அறிகுறி என விமர்சித்தார். யோகி ஆதித்யநாத் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேவையற்ற குழப்பங்கள் மட்டுமே ஏற்படும் என்றும் அவரை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

தான் உண்மையான துறவிகளை மதிப்பதாகவும் தேர்தல் நேரத்தில் துறவி வேடம் இடுபவர்களை அல்ல என்றும் மம்தா பானர்ஜி பேசினார். அகிலேஷ் யாதவை வெற்றிபெறச்செய்வதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவை பாதுகாக்க முடியும் என்றும் மம்தா தெரிவித்தார். இதே கூட்டத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் பங்கேற்று பேசினார்.