மேற்கு வங்கத்தின் பவானிபூர் தொகுதியில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. ஆனால், கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். எனினும், ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெற்றதால் மீண்டும் முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றார். ஆனாலும் 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.