இந்தியா

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் மம்தா!

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் மம்தா!

sharpana

மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

தேர்தல் பரப்புரையின்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கீழே தள்ளிவிடப்பட்டதாகக்கூறி காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா, நந்திகிராம் தொகுதியிலிருந்து போட்டியிட உள்ளார். அதற்காக வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது. இந்நிகழ்விற்கு எதிர்கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று மாலை கொல்கத்தாவிலுள்ள எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் மம்தா பானர்ஜி. மருத்துவமனை தரப்பில் “சிகிச்சைக்கு மம்தா பானர்ஜி நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர், தொடர்ச்சியாக கோரிக்கை வைத்ததால் அறிவுறுத்தல்களுடன் டிஸ்சார்ஜ் செய்துள்ளோம். அவரின் இந்த முடிவை ஏழு நாட்களுக்குப் பிறகு மீண்டும் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை வைத்திருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.