தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொகுசு பங்களாவை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
வங்கிகளில் பெற்ற பல கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாமல், தொழில் அதிபர் விஜய் மல்லையா லண்டன் சென்று விட்டார். அவர் சட்டவிரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில், மல்லையாவுக்குச் சொந்தமான மகாராஷ்ட்ரா மாநிலம் அலிபாக் கடற்கரை ஓரத்தில் உள்ள பங்களாவை அமலாக்கத்துறை முடக்கி வைத்தது. இதை எதிர்த்து அந்நிறுவனம் தொடர்ந்த மனுவை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, பங்களாவை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இந்த வீட்டின் சந்தை மதிப்பு ரூ.100 கோடி என்று கூறப்படுகிறது.