மல்லிகார்ஜுன் கார்கே web
இந்தியா

'கல்வி முறையையே பாஜக சீரழித்துவிட்டது..'! காங். தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சாடல்!

கல்வி முறையையே பாஜக சீரழித்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சாடியுள்ளார்.

Rishan Vengai

மத்திய பாஜக அரசின் தவறான செயல்பாடுகள் காரணமாக நாட்டின் கல்வி முறை முழுவதும் சீரழிந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டுகிறார். நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் மூலம் கல்வியை கொள்ளை வியாபாரமாக மாற்றியுள்ளதாகவும், மத்தியப் பிரதேச வியாபம் ஊழலில் தொடங்கிய சீரழிவு இன்று சிபிஎஸ்இ தேர்வுகளையும் பாதித்து மாணவர்களின் எதிர்காலம் பாழாகிறது எனவும் அவர் வேதனை தெரிவிக்கிறார்.

மத்திய பாஜக அரசின் தவறான செயல்பாடுகளால் நாட்டின் ஒட்டுமொத்த கல்வி முறையும் சீரழிந்துவிட்டதாக, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் மூலம் கல்வியை வெறும் கொள்ளை வியாபாரமாக பாஜக அரசு மாற்றிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தின் வியாபம் ஊழலில் தொடங்கிய இந்தச் சீரழிவு, இன்று சிபிஎஸ்இ தேர்வு முறை வரை பரவி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கி வருவதாகவும் மல்லிகார்ஜூன் கார்கே வேதனை தெரிவித்துள்ளார்.