கார்கே முகநூல்
இந்தியா

பஹல்காம் தாக்குதல் தொடர்பான கூட்டம்...மோடியை சாடிய கார்கே!

பஹல்காம் தாக்குதல் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டங்களில், மோடி பங்கேற்காதது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடியை சாடியுள்ளார்.

PT WEB

பஹல்காம் தாக்குதல் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டங்களில், மோடி பங்கேற்காதது வெட்கக்கேடானது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சாடியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடைபெற்ற, ஜெய் கிசான், ஜெய் ஜவான், ஜெய் சம்விதான் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

அப்போது அவர், பாஜக அரசு பிஹார் வாக்காளர் பட்டியலில் மோசடி செய்து, 2 கோடி வாக்குகளை நீக்கி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். பணவீக்கம் அதிகரிப்பு, மணிப்பூர் கலவரம், வேலையின்மை போன்ற விவகாரங்களில் மோடியை காணவில்லை எனவும், பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக ஓடிப்போகும் நபர்களை நாம் கேள்வி கேட்க வேண்டுமெனவும், மல்லிகார்ஜூன கார்கே சாடினார்.