கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு 4வது முறையாக மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி கேரள நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான நடிகர் திலீப் கடந்த 2 மாத காலமாக சிறையில் இருக்கிறார். இவரது சிறைக்காவல் வரும் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் கோரி திலீப் தரப்பில் 3 முறை தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை கேரள உயர்நீதிமன்றம் இருமுறை நிராகரித்தது.
கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒருமுறை ஜாமீனை நிராகரித்த நிலையில், மற்றொரு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பை இன்று வழங்கிய நீதிமன்றம், வழக்கில் இன்னும் நிறைய சாட்சியங்கள் விசாரிக்க வேண்டியுள்ளதால், திலீப்பிற்கு ஜாமின் வழங்கக் கூடாது எனும் அரசு தரப்பு வாதத்தை ஏற்று ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் நடிகர் திலீப்பின் சிறைவாசம் கொச்சி ஆலுவா கிளைச்சிறையில் தொடர்கிறது.