மோடி கொண்டு வந்த மேக் இன் இந்தியா திட்டம் தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, கடுமையான விமர்சனங்களை பிரதமர் மோடியின் மீதும், பாஜகவுக்கு எதிராகவும் முன்வைத்தார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்திய அரசியலமைப்பை சிதைக்கும் என்று கூறிய ராகுல் காந்தி, போகும் இடமெல்லாம் பொதுமக்கள் மத்தியில் மோடி பொய் பேசி வருவதாக குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி கொண்டு வந்த மேக் இன் இந்தியா திட்டம் தோல்வியடைந்து விட்டதாகவும் ராகுல் விமர்சித்தார்.