இந்தியா

சினிமா ஸ்டூடியோவில் தீ : சேனலுக்காக போடப்பட்ட செட் எரிந்து நாசம்

சினிமா ஸ்டூடியோவில் தீ : சேனலுக்காக போடப்பட்ட செட் எரிந்து நாசம்

webteam

மும்பையில் உள்ள பிரபல ஆர்.கே. ஸ்டூடியோவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் போடப்பட்டு இருந்த பிரமாண்ட செட் எரிந்து நாசமானது.

மும்பை செம்பூரில் உள்ளது, ஆர்.கே. ஸ்டூடியோ. பிரபல சினிமா ஸ்டூடியோவான இங்கு சோனி டிவி நடத்தும் சூப்பர் டான்ஸர் நிகழ்ச்சிக்காக, பிரமாண்ட செட் போடப்பட்டிருந்தது. இங்கு மின் கசிவு காரணமாக நேற்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரியத்தொடங்கியதும் அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். 
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.