இந்தியா

ஒடிசா பெட்ரோல் பங்க்கில் பயங்கர தீவிபத்து - 8 பேர் படுகாயம்

ஒடிசா பெட்ரோல் பங்க்கில் பயங்கர தீவிபத்து - 8 பேர் படுகாயம்

Sinekadhara

புவனேஸ்வர் ராஜ்பவன் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கில் புதன்கிழமை திடீரென பெரிய தீவிபத்து ஏற்பட்டது.

அதில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்படவே, அங்குள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது ஒருவழியாக தீ அணைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி சாரங்கி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், தீவிபத்து ஏற்பட்டவுடனேயே இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.

மேலும் அருகிலிருந்த மற்ற இரண்டு டீசல், பெட்ரோல் டேங்க்கிலும் தீபற்றி விடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக இரண்டு டேங்கையும் காலி செய்ததுடன் ஒருவழியாக தீயையும் அணைத்துவிட்டதாகக் கூறியுள்ளார். தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த தீவிபத்தில் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கு ஆகும் செலவை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்னாயிக் தெரிவித்துள்ளார்.