இந்தியா

வந்தாச்சு மஹிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...!

EllusamyKarthik

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் ஆட்டோ மொபைல் தொழில்நுட்பத்தில் மாற்றத்தை கொண்டு வரும் முயற்சிகளை அவ்வப்போது மேற்கொள்வதுண்டு.

அந்த வகையில் இந்த ஆண்டின் துவக்கத்தில் நொய்டாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் எலக்ட்ரானிக் எஸ்.யூ.வி ரக மினி காரான e-KUV100 மாடலை காட்சிக்கு வைத்திருந்தது.

இந்நிலையில் விரைவில் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளார் நிர்வாக இயக்குனர் பவன் குமார். 

இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை 8.25 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 147 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இந்த கார் இயங்குகிறது. 

ஸ்டியரிங்கில் ஆடியோ கண்ட்ரோல், லொக்கேஷன் டிரேக்கிங் வசதி என தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த கார் அசத்துகிறது. 

பார்ப்பதற்கு அசப்பில் KUV 100 ரக பெட்ரோல் மற்றும் டீசல் ரக கார் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. 

டெல்லி அரசாங்கம் எலக்ட்ரிக் கார்களை வாங்க 1.5 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையும் அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.