இந்தியா

தினமும் 2 கிமீ நடந்து ஆழமான கிணற்றில் ஆபத்தான முறையில் நீர் எடுக்கும் பெண்கள்

ச. முத்துகிருஷ்ணன்

கடும் பற்றாக்குறையால், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பெண்கள் ஆழமான கிணற்றில் இறங்கி தண்ணீர் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றின் முன்பாக நீண்ட வரிசையில் வைக்கப்பட்டிருக்கிறது வெற்றுக்குடங்கள். தண்ணீருக்காக தினமும் இரண்டு கிலோமீட்டர் தொலைவு நடந்து வரும் பெண்கள், கிணற்றில்தான் தண்ணீர் எடுக்கிறார்கள். நாசிக் அருகே ரோஹிலே கிராமத்தில்தான் இந்த அவல நிலை. குடங்களுடன் நெடுந்தொலைவு நடந்து வந்து மிகவும் ஆழமான கிணற்றில், ஏணி மூலம் இறங்கி குடங்களிலும், கேன்களிலும் பெண்கள் தண்ணீரை சேகரிக்கிறார்கள். சில நேரம் கிணற்றுக்குள் விழுந்துவிடும் நிகழ்வுகளும் நடக்கின்றன.


இதுகுறித்து நாசிக் நீர்வளத்துறை பொறியாளர் அல்கா அஹிரோவிடம் கேட்டபோது, நாசிக்கில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு நீர் இருப்பு அதிகம் உள்ளதாகவும், ஜூன் மாதம் வரை தண்ணீர் பற்றாக்குறை வராது என்றும் தெரிவித்தார். நாசிக் ஆட்சியர் கோரிக்கைப்படி, தண்ணீர் தேவைப்படும் பகுதிகளில் முறையாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.