மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கருத்தை கண்டித்து சிவசேனா கட்சித் தொண்டர்கள் குப்பைக் கொட்டிப் போராட்டம் நடத்தினர்.
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் அண்மையில் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பங்கேற்றார். அப்போது அவுரங்காபாத்தில் கொட்டப்படும் குப்பைகளை இரண்டு நாட்களில் அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நகராட்சி கலைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தேவேந்திர ஃபட்னாவிஸ் பேச்சுக்கு சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் அவுரங்காபாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக குப்பைகளைக் கொட்டிப் போராட்டம் நடத்தினர். மூன்று லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்ட குப்பைகள், சேது சுவிதா கேந்திரா எனப்படும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கொட்டப்பட்டது. பின்னர் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்க்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.