இந்தியா

பிரதமருக்கு செய்யப்பட்ட செலவு: மகாராஷ்ட்ரா அரசு மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்

பிரதமருக்கு செய்யப்பட்ட செலவு: மகாராஷ்ட்ரா அரசு மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்

Rasus

அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்படும் நெருக்கடி நிதியில் இருந்து, பிரதமர் மோடியின் விழாக்களுக்கு மகாராஷ்ட்ரா அரசு செலவு செய்ததை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடி பங்கேற்ற விழாக்கள் மற்றும் அதன் விளம்பரங்களுக்காக, நெருக்கடி நிதியில் இருந்து ரூபாய் 8 கோடியை செலவு செய்தது மகாராஷ்டிரா அரசு. நெருக்கடி நிதி என்பது எதிர்பார்க்காத அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்படும் நிதி. சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டிய விழா, மும்பை மெட்ரோ ரயில் தொடக்க விழா போன்ற பல விழாக்களுக்காக பிரதமர் மோடி, மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வந்தார். அப்போது அவருக்காக செய்த செலவுகள் ரூ.8 கோடி என்றும் அது நெருக்கடி நிதியில் இருந்து எடுக்கப்பட்டது எனவும் மகாராஷ்டிரா பொதுப்பணித்துறை அம்மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில் கூறியது.

பிரதமர் மோடியின் வருகையை ‘அவசர இயல்பு’ கொண்டதாக கருதியதால் நெருக்கடி நிதியில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாகவும் பொதுப்பணித்துறைக் கூறியுள்ளது.நெருக்கடி நிதியிலிருந்து பிரதமர் மோடியின் விழாக்களுக்குச் செலவு செய்ததை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. விவசாயிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியில் இருந்து பிரதமரின் விழாவுக்குச் செலவு செய்துள்ளது அருவருக்கத்தக்க விஷயம் என சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவர் தனஞ்சய் முண்டே கூறியுள்ளார்.