இந்தியா

போராட்ட வழக்கு : ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட்

போராட்ட வழக்கு : ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட்

webteam

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய மகாராஷ்டிரா மாநில கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2010ம் ஆண்டு மகாராஷ்டிராவில் கோதாவரி ஆற்றின் குறுக்கே பாப்லி பகுதியில் அணை கட்ட அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த அணையினால் ஆந்திர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி, அப்போது ஒருங்கிணைந்த ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு பாப்லி சென்று போராட்டம் நடத்தினார். இதனால் சந்திரபாபு நாயுடு, தற்போதைய நீர்வளத்துறை அமைச்சர் தேவிநேனி உமாமகேஷ்வர ராவ் உள்ளிட்ட தெலுங்கு தேசம் கட்சியினர் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் ஆஜராகாததால், சந்திரபாபு நாயுடு மற்றும் தேவிநேனியை கைது செய்து வரும் 21ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடுவின் மகனும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான லோகேஷ், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தெலுங்குதேசம் கட்சியினர் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று தெரிவித்தார்.