இந்தியா

மகாராஷ்டிரா தேர்தல்: முதல்வர் ஃபட்னாவிஸ் முன்னிலை

மகாராஷ்டிரா தேர்தல்: முதல்வர் ஃபட்னாவிஸ் முன்னிலை

webteam

மகராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலை பெற்றுள்ளார்.

மகாராஷ்டிரா, ஹரியா‌னா மாநில சட்டப்பேரவைகளுக்கு கடந்த திங்களன்று வாக்குப்பதிவு நடைபெற்றன. வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. 288 ‌சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட‌ ‌மகாராஷ்டிராவில், 235 பெண்கள் உள்பட 3,237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் பாஜகவும், சிவசேனாவும் ஒரு‌ கூட்டணி‌யாகவும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ‌கட்சிகள் மற்றொரு கூட்டணியாகவும் களமி‌றங்கின. 

பாஜக 152 இடங்களிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில், காங்கிரஸ் 145 இடங்களி லும்,‌ தேசியவாத காங்கிரஸ் 123 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இன்று காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. தொடங்கியதில் இருந்தே பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. அங்கு பாஜக- சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 

இந்நிலையில் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ,தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலை பெற்றுள் ளார்.