இந்தியா

“மதுபானம் வீடு தேடி வருகிறது”... மகாராஷ்டிரா அரசு புது முடிவு...!

“மதுபானம் வீடு தேடி வருகிறது”... மகாராஷ்டிரா அரசு புது முடிவு...!

Rasus

இந்தியாவிலேயே முதல்முறையாக மதுபானத்தை வீடு தேடி சென்று டெலிவரி செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

இப்போது காய்கறி முதல் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வீட்டிலிருந்தே ஆர்டர் செய்தால் போதும். ஹோம் டெலிவரி வசதி இருப்பதால் பொருட்கள் அனைத்தும் வீடு தேடியே வருகின்றன. இந்நிலையில் மகாராஷ்டிரா அரசு மதுபானத்தையும் வீடு தேடி ஹோம் டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய மாநில அமைச்சர் சந்திரசேகர் பவான்குலே, “ இந்தியாவிலேயே முதல்முறையாக மகாராஷ்டிரா அரசு மதுபானத்தை வீடு தேடி சென்று டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளது. இதன்நோக்கமே விபத்துகளை குறைக்க செய்வதே. காரணம், குடித்துவிட்டு பின்னர் வண்டிகளை ஓட்டும்போது விபத்துகள் அதிகமாகி விலைமதிப்பில்லாத உயிர்களை இழக்கும் சூழல் உருவாகுகிறது. இனிமேல் காய்கறி, மளிகை பொருட்களை வீட்டிலிருந்து ஆர்டர் செய்துவது போல் விரைவில் மதுபானத்தையும் ஆர்டர் செய்ய முடியும். அதேசமயம் ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது வாடிக்கையாளர்களின் விவரங்கள் சேரிக்கப்படும். வாடிக்கையாளர்களின் வயது விவரங்களை அறிய சம்பந்தப்பட்ட நபரின் ஆதார் விவரங்கள் சேரிக்கப்பட்டு பின்னர் ஹோம் டெலிவலி செய்யப்படும்” என்றார். 

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின்படி, 2015-ஆம் மொத்தமாக நடைபெற்ற 4.64 லட்ச சாலை விபத்துகளில் 1.5 சதவீத விபத்துகள் குடித்துவிட்டு வண்டி ஓட்டிய காரணத்தினால் நடைபெற்றது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

Courtesy: TheTimesofIndia