இந்தியா

”அர்னாப்பை 14 நாள் காவலில் எடுக்க அனுமதியுங்கள்” மகாராஷ்டிரா காவல்துறை

”அர்னாப்பை 14 நாள் காவலில் எடுக்க அனுமதியுங்கள்” மகாராஷ்டிரா காவல்துறை

webteam

ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப்பை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மகாராஷ்டிரா காவல்துறை கோரிக்கை வைத்துள்ளது. 

அலிபாக் பகுதியைச் சேர்ந்த உள்கட்டட வடிவமைப்பாளர் அன்வய் நாயக் தனது தாயார் குமுத் நாயக்குடன் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப், ஃபெரோஸ் ஷேக் மற்றும் நிதீஷ் சர்தா ஆகியோர் தனக்குத் தரவேண்டிய 5.40 கோடி ரூபாயை தராததே காரணம் என அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக அர்னாப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் டி ஆர்.பி ரேட்டிங் தொடர்பான வழக்குகளையும் முன்வைத்து மும்பை காவல்துறை அவரை இன்று காலை கைது செய்தது. கைதின் போது அவர் காவல்துறையால் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு ஆதரவு குரல்களும் எதிர்ப்பு குரல்களும் எழுந்து வருகிறது.

இந்நிலையில் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல்துறையினர் அவரை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளனர். டி.ஆர்.பி ரேட்டிங் தொடர்பான வழக்கு விசாரணை நாளை மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.