இந்தியா

மகாராஷ்ட்ரா: 12 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்க விவகாரம் - தீர்ப்பு ஒத்திவைப்பு

மகாராஷ்ட்ரா: 12 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்க விவகாரம் - தீர்ப்பு ஒத்திவைப்பு

கலிலுல்லா

மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையிலிருந்து 12 பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த ஆண்டு மழைக்காலக் கூட்டத்தொடரின்போது சபாநாயகர் அறையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகக்கூறி பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் 12 பேர் ஓராண்டிற்கு பேரவை அலுவல்களில் பங்கேற்க தடை விதித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 12 எம்எல்ஏக்களும் மேல் முறையீடு செய்தனர்.

தங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றிவிட்டதாக அவர்கள் கூறியிருந்தனர். நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வில் நடைபெற்றுவந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பு தேதி குறிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது.