மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்யும் திட்டம் தற்போது இல்லை என்று மகாராஷ்ட்ரா அமைச்சர் திடீர் பல்டி அடித்துள் ளார்.
மகாராஷ்டிராவில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் அதிக விபத்து ஏற்படுகிறது. பொதுமக்கள் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பதற்காக, ஆன்-லைன் மதுபான விற்பனைக்கு அனுமதியளிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ள தாகக் கூறப்பட்டது.
இதுகுறித்து மாநில கலால் வரித்துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே கூறும்போது, ’மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவ தை தடுப்பதற்காக வீடுகளுக்கு மதுபானங்களை சப்ளை செய்ய முடிவு செய்துள்ளோம். அது மதுகுடிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து இதை அவர் மறுத்துள்ளார். ‘ஓட்டல் மற்றும் பார்களுக்குச் சென்று மதுகுடிப் பதை விரும்பாத சிலர், வீட்டிலேயே மது குடிக்கின்றனர். ஆன்லைனில் மது விற்பது இங்கு தடை செய்யப்பட்டுள் ளது. அதனால் அவர்கள், ஆன்லைன் மூலம் வீடுகளுக்கு மதுவிற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று எனது துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக, அரசு விவாதித்து வருகிறது. மதுபானங்களை வீடுகளுக்கு நேரடியாக விநியோகிக்கும் திட்டம் தற்போதைக் கு இல்லை’ என்று அவர் தெரிவித்துள்ளார்.