மகாராஷ்டிரா - கர்நாடக மொழி விவகாரம் முகநூல்
இந்தியா

மகாராஷ்டிரா - கர்நாடக மொழி விவகாரம் | அமைதி காக்க வேண்டுகோள் விடுத்த அமைச்சர் பரமேஸ்வரா!

மொழி மோதல்: மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவை நிறுத்தம்

PT WEB

மகாராஷ்ட்ராவுடன் மொழி விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும் என கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மகாராஷ்டிரா சென்ற கர்நாடக அரசுப் பேருந்து நடத்துநருக்கு மராத்தி தெரியாதது சர்ச்சையாகி பயணிகள் நடத்துநரை கடுமையாக தாக்கியது இரு மாநிலங்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு மாநில பேருந்துகளும் தாக்குதலுக்குள்ளாகின.

இதையடுத்து, இரு மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட நடத்துநரை சந்தித்து கர்நாடக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி நலம் விசாரித்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, வன்முறையில் ஈடுபடும் தங்கள் மாநிலத்தவர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் அதே நேரம் மகாராஷ்டிர அரசும் தங்கள் தரப்பில் வன்முறையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.