இந்தியா

சத்ரபதி சிவாஜியின் வாளை இந்தியாவிற்கு கொண்டுவர முயற்சி; ரிஷி சுனக் உதவுவாரா?

Abinaya

இங்கிலாந்தில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாளை மீட்டுத் தருமாறு மகாராஷ்டிர அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக மாநில கலாசாரத் துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளார்.

‘2024ல் சிவாஜி மகாராஜின் முடிசூட்டு விழாவான, 350வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவோம். அப்போது அவரது `ஜகதம்பா வாளை' இங்கிலாந்தில் இருந்து கொண்டு வர விரும்புகிறோம். அந்த வாள் சிவாஜி மகாராஜாவால் தொடப்பட்டது. எனவே இது எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கது" என மாநில கலாசாரத் துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் கூறினார்.

எனவே வாளை இங்கிலாந்திலிருந்து மீட்டு கொண்டுவர மத்திய அரசை முயற்சிகளை மேற்கொள்ள கோரி உள்ளோம். இப்போது இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் உள்ளார். எனவே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்போம். இங்கிலாந்து வாளை ஒப்படைத்தால், 2024ம் ஆண்டு விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்ய எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். எங்களது கோரிக்கை வெளிப்படையானது. ஏனெனில் இது எங்களின் பெருமை ‘’ கூறியுள்ளார்.