கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க மகாராஷ்டிரா அரசுப் பேருந்துகளில் ரசாயனம் பூசப்பட உள்ளது.
பேருந்துகளின் உட்பகுதியிலும் வெளியிலும் பூசப்படும் ரசாயனத்தால் அவற்றின் மீது படியும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட தொற்றுக் கிருமிகள் அழிந்து விடும் என மகாராஷ்டிரா அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. ANTI MICROBIAL எனப்படும் பூச்சுக்களை பூசுவதை விமான நிறுவனங்கள் ஏற்கெனவே கடைபிடித்து வருவதாகவும் அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
10 ஆயிரம் பேருந்துகளுக்கு ரசாயனப் பூச்சு பூசப்படும் என்றும் இதற்கு ஒரு பேருந்துக்கு 9 ஆயிரத்து 500 ரூபாய் செலவாகும் என்றும் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சத்தால் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் ரசாயனப் பூச்சுக்குப் பின் இந்நிலை மாறும் என கருதுவதாகவும் போக்குவரத்துக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது