இந்தியா

ஆமை முட்டை பற்றி தகவல் கொடுத்தால் விருதுடன் ரூ.5000 பரிசு

ஆமை முட்டை பற்றி தகவல் கொடுத்தால் விருதுடன் ரூ.5000 பரிசு

webteam

அரிய வகை உயிரினமாக மாறி வரும் கடல் ஆமை முட்டைகள் இருக்கும் இடத்தைக் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு 5000 ரூபாய் பரிசும், விருதும் வழங்கப்படும் என மஹாராஷ்ட்ர வனத்துறை மற்றும் வனவிலங்குகள் நலத்துறை அறிவித்துள்ளது.

கடல் ஆமைகள் அரிய உயிரினமாக மாறி வருகிறது. இதனால், இவ்வுயிரினங்களைக் காப்பாற்றும் பொருட்டு கடல் ஆமை முட்டைகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 5000 ரூபாய் பரிசும், அவர்களை கவுரவிக்கும் வகையில் ‘கசவ் புரஸ்கார்’விருதும் அளிக்கப்படும் என மஹாராஷ்டிர வனத்துறையும், வனவிலங்குகள் நலத்துறையும் ஒருங்கிணைந்து அறிவித்துள்ளது.

கடல் ஆமை அழிப்பு, வன விலங்குகள் வதைத்தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடல் ஆமைகளை கொல்லும் குற்றத்திற்கு, ரூ.24,000 அபராதமும் 7 வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.