இந்தியா

“ஒருநாள் சிவசேனாவைச் சேர்ந்தவர் முதல்வர் ஆவார்” - உத்தவ் தாக்கரே

webteam

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவில் வரும் 21ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள சிவசேனா, மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 124 இடங்களில் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேர்தல் குறித்து சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னாவில் பேட்டி அளித்துள்ள உத்தவ் தாக்கரே, ஒருநாள் சிவசேனாவைச் சேர்ந்தவர்களும் மகாராஷ்டிராவின் முதலமைச்சராவார்கள் என்று கூறியுள்ளார். 

இதை மறைந்த சிவசேனா கட்சி நிறுவனரும், தனது தந்தையுமான பால் தாக்கரேவிடம் ஏற்கனவே வாக்குறுதியளித்ததாகவும் உத்தரவ் தாக்கரே அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சிவசேனா கட்சி நிறுவனர்களின் குடும்பத்தில் இருந்து முதல்முறையாக அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே ஓர்லி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் உத்தவ் தாக்கரே இவ்வாறு கூறியுள்ளது சிவசேனா கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.