இந்தியா

ஹெலிகாப்டர் விபத்து: உயிர் தப்பினார் முதல்வர்

ஹெலிகாப்டர் விபத்து: உயிர் தப்பினார் முதல்வர்

Rasus

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மகாராஷ்டிரா முதல்வர் பத்னாவிஸ் ஹெலிகாப்டர் மூலம் லத்தூர் என்ற பகுதிக்கு சென்றார். ஹெலிகாப்டர் தரையிறங்க முற்படும்போது எதிர்பாராத விதமாக தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது தொடர்பாக தேவேந்திர பட்னாவீஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், நானும், எனது குழுவினரும் இணைந்து சென்ற ஹெலிகாப்டர் தரையில் இறங்கும்போது விபத்துக்குள்ளானது. ஆனால் நாங்கள் அனைவரும் பத்திரமாக இருக்கிறோம் என்றும், யாரும் பயப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.