இந்தியா

கொரோனா தடுப்பூசி வழங்குவதில் பாஜக ஆளாத மாநிலங்களுக்கு பாரபட்சமா? - மத்திய அரசு விளக்கம்

EllusamyKarthik

“அனைத்து மாநிலங்களும்  ஒரே மாதிரியாகத்தான் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் நடக்கிறது” என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.

“எந்தவித பாகுபாடும் இல்லாமல் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக கருதிதான் கொரோனா தடுப்பு மருந்துகளை மத்திய அரசு விநியோகித்து வருகிறது. இதில் பாஜக ஆள்கிற மாநிலங்களில் ஒரு வகையிலும், பாஜக ஆளாத மாநிலங்களில் வேறு வகையில் மருந்து விநியோகம் நடப்பதாக எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் முதலை கண்ணீர் வடிப்பது அவர்களது இயலாமையை மறைக்க மேற்கொள்ளும் செயல்.

நாட்டிலேயே அதிகளவிலான கொரோனா தடுப்பூசிகளை பெற்று டாப் மூன்று மாநிலங்களில் இரண்டு மாநிலங்கள் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் என நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா அரசு மத்திய பாஜக அரசு மீது தடுப்பு மருந்து விநியோக விவகாரத்தில் குற்றம் சுமத்தி இருந்த நிலையில் இதனை அவர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக வீசி வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் நோய் தொற்றினால் புதிதாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் மொத்தமாக 9,01,98,673 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.