மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் அரசு மருத்துவமனையில் 55 பச்சிளம் குழந்தைகள் ஒரே மாதத்தில் உயிரிழந்துள்ளன.
உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்த நிலையில், மகாராஷ்ட்ராவிலும் ஒரு மாதத்தில் 55 குழந்தைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
அலட்சியத்தின் காரணமாக இந்த உயிரிழப்புகள் நேரிடவில்லை என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. உயிர் பிரியும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளே உயிரிழந்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.