இந்தியா

பிரதமர் மோடி மகாராஷ்டிரா வருகை - முதல்வர் உத்தவ் தாக்கரே வரவேற்பு

பிரதமர் மோடி மகாராஷ்டிரா வருகை - முதல்வர் உத்தவ் தாக்கரே வரவேற்பு

webteam

மகாராஷ்டிரா வந்த பிரதமர் மோடியை புனே விமான நிலையத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வரவேற்றார். 

மகாராஷ்டிராவில் நாளை மற்றும் நாளை மறுநாள் காவலர்கள் சார்ந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று புனே விமான நிலையம் வந்தார். அப்போது அவரை அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வரவேற்றார். 

மேலும் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆகியோரும் பிரதமரை வரவேற்றனர்.