இந்தியா

’பாகுபலி’க்கு அடுத்த மாதம் மஸ்தகாபிஷேக விழா!

webteam

தர்மஸ்தலாவில் உள்ள பாகுபலி சிலைக்கு அடுத்த மாதம் 15 ஆம் தேதி மகா மஸ்தகாபி ஷேக விழா நடக்கிறது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இதைத் தொடங்கி வைக்கிறார்.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சரவணபெலகோலா பகுதியில் 57 அடி உயர பகவான் ’பாகுபலி’ சிலை உள்ளது. இந்த சிலை நிறுவி 12 வருடத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு மகா மஸ்தகாபிஷேக விழா நடந்தது. இதேப்போல தரமஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோவில் அருகே உள்ள மலையில், 39 அடி உயர பாகுபலி சிலை உள்ளது. இந்த சிலைக்கு 2007-ம் ஆண்டு மகா மஸ்தகாபிஷேக விழா நடந்தது. 

இந் நிலையில் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை, 5 நாட்கள் இந்தச் சிலைக்கு மகா மஸ்தகாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 15 ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இதைத் தொடக்கி வைக்கிறார். இதில் 1008 கலசங்களில் சிறப்பு பூஜை செய்யப்பட இருக்கிறது. இந்த விழாவில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான புத்தமத துறவிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோவில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே இத்தகவலை தெரிவித்துள்ளார்.