இந்தியா

'விவிஐபி மரம்' - ஆண்டுக்கு ரூ.12 லட்சம் செலவு செய்யும் அரசு

'விவிஐபி மரம்' - ஆண்டுக்கு ரூ.12 லட்சம் செலவு செய்யும் அரசு

webteam

மத்தியப் பிரதேச மாநிலத்தில் விவிஐபி மரத்தை  பாதுகாக்க ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் செலவிடுகிறது அம்மாநில அரசு.

மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி புத்தர் காம்ப்ளக்ஸுக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் விவிஐபி மரம் ​என கருதப்படும் அரசமரம் உள்ளது. இந்த புகழ்பெற்ற மரத்தை பேணிக் காக்க ஆண்டுதோறும் 12 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது என மாநில அரசு தெரிவித்துள்ளது. காலை மற்றும் மாலை நேர்ஙகளில் தவறாமல் தண்ணீர் ஊற்றுவதில் இருந்து பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இந்த மரம் பராமரிக்கப்பட்டு வருவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. இந்த மரத்தை சுற்றி பாதுகாப்பு வளையங்களும், 4 காவலர்களும் பாதுகாப்பு பணியி்ல் ஈடுபட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் விவசாயம் பொய்த்து போவதன் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு மரத்தை பாதுகாக்க ஆண்டுக்கு ரூ.12 லட்சம் செலவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.