மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம் twitter
இந்தியா

ம.பி.: சகோதரிகள் இருவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை: பாஜக நிர்வாகியின் மகன் மீது வழக்குப்பதிவு

Prakash J

இதுகுறித்து போலீசார் விசாரணையில், ‘மத்தியப் பிரதேசத்தில், சகோதரிகள் இருவரை ஒரு கும்பல் கடத்திச் சென்றுள்ளது. பின்னர், அந்தக் கும்பல் அவர்கள் இருவரையும் ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளது. அதில் சகோதரிகளில் மூத்த பெண்ணை அந்தக் கும்பல் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவரது தங்கையும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கிறார். அதன்பிறகு, அவர்கள் இருவரும் தங்களது வீடு திரும்பியுள்ளனர். இதில், மூத்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர், தற்போது மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவின் தாதியா தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடந்திருக்கிறது. இதுகுறித்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்தப் பெண்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Arrest

”இந்த சம்பவத்தில் தப்பியோடிய இரண்டு நபர்களைத் தேடி வருகிறோம். குற்றம்சாட்டப்பட்ட 4 பேரில் ஒரு மாணவர், அப்பகுதி பாஜக பிரமுகரின் மகன் என தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் அனைவருமே மாணவர்கள். அதனால் இவ்விவகாரத்தைத் தீவிரமாக விசாரித்து வருகிறோம். குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக இருக்கும் நபர் குறித்து தகவல் தருபவர்களுக்கு போலீஸார் தரப்பில் 10,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது” என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.