இந்தியா

மழையால் தத்தளிக்கும் மத்திய பிரதேசம் - மீட்பு பணியில் ராணுவம்

மழையால் தத்தளிக்கும் மத்திய பிரதேசம் - மீட்பு பணியில் ராணுவம்

PT WEB

மத்தியப் பிரதேசத்தில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் வெள்ளம் சூழ்ந்துள்ள கிராமங்களில் சிக்கிக்கொண்டிருப்போரை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஷியோபூர் மற்றும் ஷிவ்பூர் மாவட்டங்களில் இரவிலும் கனமழை பெய்தது. ஷியோபூர் மாவட்டத்தில் விஜய்ப்பூர் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு கட்டடத்தில் சிக்கிக்கொண்ட சுமார் 60 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

ஷிவ்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று கிராமங்களில் சிக்கிக்கொண்டவர்களை மீட்க நான்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களும் கடந்த சனிக்கிழமை முதல் கனமழையை சந்தித்து வருகின்றன.