இந்தியா

'ஷூ'வை சுத்தம் செய்து வாக்கு கேட்கும் வேட்பாளர்

'ஷூ'வை சுத்தம் செய்து வாக்கு கேட்கும் வேட்பாளர்

webteam

தொகுதி மக்களின் ஷூக்களை சுத்தம் செய்து வித்தியாசமாக பிரசாரம் செய்து வருகிறார் மத்திய பிரதேச வேட்பாளர் ஒருவர்.

மத்திய பிரதேசத்தில் வரும் 28 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இங்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ராஷ்டிரிய ஆம்ஜன் கட்சியை (Rashtriya Aamjan Party) சேர்ந்த வேட்பாளர் சரத் சிங் குமார் வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து வருகிறார்.  இவர், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி கடந்த 2014ஆம் ஆண்டு‌ இந்தக் கட்சியை‌ தொடங்கியுள்ளார். 

தற்போது போபால் தொகுதியில் போட்டியிடும் இவரது கட்சியின் சின்னம் ஷூ. இதனால், சாலை‌யில்‌ செல்லும் தொகுதி வாக்காளர்களின் ஷூக்களை சுத்தம் செய்து‌ பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

தெலங்கானாவில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் செருப்பை வாக்காளர்களுக்கு கொடுத்து பிரசாரம் செய்து வரும் நிலையில் இவர் ஷூக்களை சுத்தம் செய்து வருவது வியப்பாக உள்ளதாக வாக்களர்கள் தெரிவித்துள்ளனர்.