இந்தியா

தீபாவளிக்கு பாத்திரங்கள் வாங்க கடைக்கு சென்ற முதலமைச்சர்

தீபாவளிக்கு பாத்திரங்கள் வாங்க கடைக்கு சென்ற முதலமைச்சர்

webteam

தீபாவளி பண்டிகைக்கு வீட்டிற்குத் தேவையான பாத்திரங்களை வாங்க மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேரடியாக கடைக்கு சென்றுள்ளார்.

தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிடித்த உணவுகளை சமைத்தும், பட்டாசுகள் வெடித்தும், புது ஆடைகள் உடுத்தியும் பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சரான சிவாரஜ் சிங், தன் வீட்டில் தீபாவளி கொண்டாட்டத்திற்காக புதுப் பாத்திரங்கள் வாங்க தானே கடைக்கு சென்றார். அங்கு பாத்திரங்களுக்கு உரிய தொகையை தனது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி மின்னணு பரிமாற்றம் மூலம் செலுத்தினார். அப்போது அந்த பணப்பரிவர்த்தனை ஓரிரு முறை நிராகரிக்கப்பட்டு தாமதமடைந்தது. பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு பணப்பரிமாற்றம் நடைபெற்றது. பாத்திரங்கள் வாங்க முதலமைச்சரே நேரில் வந்தது, பாத்திரக்கடை ஊழியர்களை திகைப்பில் ஆழ்த்தியது.