இந்தியா

இந்திய தேசியக் கொடியில் ‘மேட் இன் சீனா’ வாசகம்.. காமன்வெல்த் சபாநாயகர் மாநாட்டில் சர்ச்சை!

சங்கீதா

கனடா காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் இந்திய தேசியக் கொடியில் மேட் இன் சைனா என்ற பொறிக்கப்பட்டிருந்ததால் சர்ச்சசை எழுந்துள்ளது.

கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 26 வரை நடைபெற்றது. இந்தியா சார்பில் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் பல மாநில சட்டமன்ற சபாநாயகர்கள், எம்.பிக்கள் பங்கேற்றனர். மாநாடு நடைபெற்ற வளாகத்திற்கு சபாநாயகர்கள் கையில் தேசியக் கொடி ஏந்திய வண்ணம் பேரணியாக வந்தனர். அந்த தேசியக் கொடியில் மேட் இன் சைனா என்று பொறிக்கப்பட்டிருந்துள்ளது. இதுகுறித்து சபாநாயகர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் முறையிட்டுள்ளனர்.