இந்தியா

ஆன்டிராய்டு ஃபோன்களுக்கான எம்ஆதார் ஆப் அறிமுகம்

ஆன்டிராய்டு ஃபோன்களுக்கான எம்ஆதார் ஆப் அறிமுகம்

webteam

எம்ஆதார் எனப்படும் ஆதார் ஆப்-ஐ UIDAI எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (Unique Identification Authority of India) அறிமுகம் செய்துள்ளது.

ஆதார் ஆப்-பை மத்திய அரசு ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது. ஆனால் அந்த வசதி குறிப்பிட்ட செல்ஃபோன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது எம்ஆதார் எனப்படும் இந்த ஆப் அனைத்து ஆன்டிராய்டு செல்ஃபோன்களிலும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்-பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆப்-பை தரவிறக்கம் செய்து கொண்ட பின்பு, ஆதாரின் முழு விவரங்களையும் பதிவு செய்து கொள்ளலாம். இந்த ஆப் வைத்திருந்தால், ஆதார் அட்டையை எல்லா இடத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஆதார் மூலம் கிடைக்கும் சேவைகளுக்கும் இந்த ஆப்-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். விரைவில் இந்த ஆப், ஐ.ஓ.எஸ் (Ios) பயன்பாட்டாளர்களுக்கும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.