பிர்லா கோளரங்கத்தில் தொலைநோக்கி மூலம் சந்திர கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிர்லா கோளரங்க இயக்குனர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்
இந்தாண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் ஏற்பட்ட சந்திர கிரகணத்தை சென்னை மக்களால் காண இயலவில்லை, ஆனால் இன்றைய சந்திர கிரகணத்தை அனைவரும் வெறும் கண்களால் காண முடியும். இந்தாண்டு நடைபெறும் இறுதி சந்திர கிரகணம் அதிகாலை 1.31 மணிக்கு தொடங்கி காலை 4.30 மணிக்கு நிறைவடையும். 2 மணி நேரம் 58 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணம் நீடிக்கும்.
இன்றைய சந்திர கிரகணம் பகுதி நேர சந்திர கிரகணம் என்பதால், 65% சந்திரன் மீது பூமியின் நிழல் படியும். இது இயற்கை நிகழ்வு தான் என்பதால் உணவு அருந்தலாம், வெறும் கண்களால் காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , பிர்லா கோளரங்கத்தில் தொலைநோக்கி மூலம் சந்திர கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிர்லா கோளரங்க இயக்குனர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.