உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை அடுத்த ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (36). இவரது கணவர் ராஜு. இந்த தம்பதிக்கு 6 குழந்தைகள் உள்ளனர். ராஜேஸ்வரி தனது குடும்பத்துடன் ஹர்டோயின் ஹர்பால்பூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர்கள் பகுதியில் நன்ஹே பண்டிட் என்ற யாசகர் இருந்துள்ளார். அவர் அப்பகுதியில் தினமும் யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்தவரான ராஜேஸ்வரி வீட்டிலும் நன்ஹே பண்டிட் யாசகம் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், ராஜேஸ்வரிக்கும் நன்ஹே பண்டிட்டிற்கும் மாறியுள்ளதாக தெரிகிறது.
இருவரும், நேரிலும், மொபைல் போனில் தினமும் மணிக்கணக்காக பேசி வந்ததாக கூறப்படுகிறது. இது கணாவர் ராஜு-க்கு தெரியவரவே மனைவி ராஜேஸ்வரியை எச்சரித்து இருக்கிறார்.
இருப்பினும் இருவருக்குள்ளான உறவு நீடித்து இருக்கிறது. சம்பவதினத்தன்று, கணவர் ராஜு எருமைமாடு விற்ற பணத்தை மனைவி ராஜேஸ்வரியிடத்தில் கொடுத்து இருக்கிறார். ராஜேஸ்வரி கணவர் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு, காய்கறிகள் வாங்கி வருவதாக தனது பெண்ணிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும், ராஜேஸ்வரி வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த கணவர் ராஜு, போலிசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ராஜேஸ்வரியும் - நன்ஹே பண்டிட் இருவரும் காணாத நிலையில், இருவரும் ஊரைவிட்டு வெளியேறியிருக்கலாம் என்று போலிசார் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து கணவர் ராஜு போலிசாரிடம் பேசுகையில், தனது மனைவியை பணத்துடன் நன்ஹே பண்டிட் மிரட்டி கூட்டிச்சென்றிருக்கலாம். ஆகவே மனைவியை கண்டுப்பிடித்து தருமாறு கூறியுள்ளார்.
ராஜு கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிசார் காணாமல் போன ராஜேஸ்வரி மற்று யாசகர் நன்ஹே பண்டிட்டை கண்டுபிடித்துவிட்டதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.